Saturday, July 12, 2025
Home செய்திகள்Banner News COOP-A-THON மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளை வழங்கிய அமைச்சர்கள்

COOP-A-THON மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளை வழங்கிய அமைச்சர்கள்

by Suresh

சென்னை: சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025, மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சார்பில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி இன்று (06.07.2025) சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆகியோர் காசோலைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்கள்.

‘’சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்’’ மினி மாரத்தான் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கி வெற்றி போர் நினைவுச்சின்னம், அண்ணா சதுக்கம், விவேகானந்தர் இல்லம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தீவுத்திடல் வந்தடைந்தார்கள், இதில் 18 வயது முதல் 40 வயது உடையவர்கள், மேலும் 40 வயது முதல் அதற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக 2000 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்கள்.

5 கி.மீ வரை சென்று தன் திறமையினை வெளிக்காட்டிய ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும், பரிசுகளும், பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

* 18 வயது முதல் 40 வயது வரை போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஆண்கள் முதல் பரிசாக தலா ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ,10,000 என வழங்கப்பட்டது. முதல் பரிசு Bib No 5656 – சுனில், இரண்டாம் பரிசு Bib No 5065 – ரோஸ்ரீத் ராமா, மூன்றாம் பரிசு Bib No 7015 – ஜய்ஸ் பட்டில்

* ஆண்கள் பிரிவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள் அவர்களில், முதல் பரிசாக தலா ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ,10,000 என வழங்கப்பட்டது. முதல் பரிசு Bib No – 5378 பாஸ்கர் கம்பெல், இரண்டாம் பரிசு Bib No – 5314 அன்பரசு, மூன்றாம் பரிசு Bib No – 5427 ராஜ்குமார் மயூயா.

* 18 வயது முதல் 40 வயது வரை போட்டியில் கலந்து கொண்டவர்களில் பெண்கள் முதல் பரிசாக தலா ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ,10,000 என வழங்கப்பட்டது. முதல் பரிசு Bib No – 6118 அன்கிட்டபென் ரமேஷ்பாய், இரண்டாம் பரிசு Bib No – 5565 லாதா, மூன்றாம் பரிசு Bib No – 5297 அனுபிரியா.

* பெண்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள் அவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ,10,000 என வழங்கப்பட்டது.
முதல் பரிசு Bib No – 6114 வசந்தி, இரண்டாம் பரிசு Bib No – ஷயமாலா , மூன்றாம் பரிசு Bib No -5181 நீலா.

இந்நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலாளர், கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை சத்யபிரதசாகு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் க.நந்தக்குமா, கூடுதல் பதிவாளர் (நுகர்பு பணிகள்) ச.பா.அம்ரித், மேயர் ஆர். பிரியா, ஆகியோர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள், உள்ளிட்ட அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi