காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதியதில் மினி லாரியின் கிளீனர் பரிதாபமாக பலியானார்.சென்னை, மேற்கு தாம்பரம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் டில்லிபாபு (34). இவர் பாலுசெட்டிசத்திரத்தில் உள்ள கோழிக்கறி கடையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடன் பாலுசெட்டிசத்திரத்தை சேர்ந்த குமார் மகன் கோகுல்ராஜ்(17) கிளீனராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை டில்லிபாபு, கிளீனர் கோகுல்ராஜூடன் பாலுசெட்டிசத்திரத்தில் இருந்து சென்னை நோக்கி மினி லாரியில் புறப்பட்டுள்ளனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காஞ்சிபுரத்தை அடுத்த சிறுணை அருகே எவ்வித சிக்னலும் இல்லாமல் நின்றுகொண்டிருந்த லாரி மீது மினி லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கோகுல்ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கோகுல்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மினி லாரி மோதி கிளீனர் பலி
0
previous post