மதுரை : 10 சக்கரத்துக்கு மேற்பட்ட லாரிகளில் கனிம வளத்தை கொண்டு செல்லக்கூடாது என்ற உத்தரவுக்கு விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கனவே இடைக்கால தடைவிதித்தது. புளியரை சுங்கச்சாவடியில் 10 சக்கர வாகனங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதித்ததை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.