தமிழ்நாடு முழுவதும் குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்குவாரியில் நேற்று பாறைகள் சரிந்து 5 பேர் உயிரிழந்தனர். விபத்தை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவு. பாதுகாப்பு நடைமுறைகளை குவாரிகள் முறையாக பின்பற்றுகின்றனவா? என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.