Thursday, September 12, 2024
Home » ராணுவத்தில் 381 அதிகாரி பணியிடங்கள்

ராணுவத்தில் 381 அதிகாரி பணியிடங்கள்

by Porselvi

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பம் (Technical) மற்றும் தொழில்நுட்பம் அல்லாத (Non-Technical) பிரிவில் ராணுவ அதிகாரி பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Short Service Commission Officers (SSC Tech 64- Men – SSC- Tech 35- Women).
மொத்த காலியிடங்கள்: 381. இதில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் விதவை மனைவிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்: ரூ.56,100- 1,77,500. வயது: 01.04.2025 தேதியின்படி 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Civil/Mechanical/Electrical/Electronics/Telecommunication/IT/ Architecture/ Aeronautical/Avionics/Computer Science Engineering/Information Technology/Satellite Communication/Remote Sensing/Ballistics Engineering/Nuclear Technology/Opto Electronics ஆகிய பாடப்பிரிவுகள் அல்லது மேற்குறிப்பிட்ட பாடங்களை ஒரு பாடமாகக் கொண்ட ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.இ.,/பி.டெக்., படிப்பை முடித்து பட்டம் பெற இருக்கும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.இ.,/பி.டெக்., கில் பட்டம் பெற்றிருக்க வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் சாராத (Non-Technical) பிரிவுக்கு கலை, அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டம் பெற்றிருக்க வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் சாராத பிரிவுக்கு போரில் மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

பொறியியல் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதல் கட்ட தேர்வில் உளவியல் தேர்வு, குழு விவாதம் மற்றும் மருத்துவத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். இதில் வெற்றி பெற்றவர்கள் 2ம் கட்டமாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் ராணுவ அதிகாரிக்குரிய பயிற்சி வழங்கப்படும். ஏப்ரல் 2025ல் பயிற்சி தொடங்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் PG Diploma in Defence Management and Strategic Studies எனும் வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர். பயிற்சி முடிந்ததும் இந்திய ராணுவத்தில் ‘லெப்டினென்ட்’ டாக பணியமர்த்தப்படுவர்.

முதுநிலை டிப்ளமோ படிப்பானது இந்திய ராணுவத்திற்கு சொந்தமான Pre Commissioning Training Academy யால் வழங்கப்படும். இதற்கான முழுச் செலவையும் இந்திய ராணுவம் ஏற்றுக் கொள்ளும்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (14.08.2024)

You may also like

Leave a Comment

one × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi