சென்னையில் இயங்கி வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
1. ஜூனியர் மேனேஜர்: 22 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1, மாற்றுத்திறனாளி-2).
2. தகுதி: மெக்கானிக்கல்/புரடக்ஷன்/ஆட்டோமொபைல்/ மேனுபேக்சரிங்/ எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ சிஎஸ்இ ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி பெற்று குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. வயது: 10.05.2025 தேதியின்படி 18 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.avnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2025.