டெல்லி: ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவத்தின் டேங்க், படைப்பிரிவை நவீனமயமாக்க, எதிர்கால தேவைக்கான நவீன டேங்குகள் வாங்கப்பட உள்ளன. வான் பாதுகாப்பு ரேடார்கள், கவச வாகனங்கள், இந்திய கடலோர காவல் படைக்கு டோர்னியர் ரக விமானம் வாங்கப்பட உள்ளன.