சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பால் மீட்பு மற்றும் நிவாரண உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது.
குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்கள் தொடர்பு கொள்ள சென்னை பெருநகர காவல் உதவி மையம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 23452359, 23452360, 23452361, 23452377, 23452437 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அதன்படி மழைநீரை அகற்றுதல், மரங்களை வெட்டும் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.