Wednesday, February 21, 2024
Home » மிக்ஜாம் புயல் பாதிப்பு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து..!!

மிக்ஜாம் புயல் பாதிப்பு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து..!!

by Lavanya

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் கவிஞர் வைரமுத்து வழங்கியுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3, 4 தேதிகளில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு தரப்பில் நிவாரண உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது,

‘தண்ணீர் தண்ணீர்
எங்கணும் தண்ணீர்
குடிக்கத்தான் இல்லை ஒருதுளி’
எனும் ஆங்கிலக் கவிதை
நினைவின் இடுக்கில் கசிகிறது

வீட்டுக்குத் தண்ணீர் இல்லை
என்பது சிறுதுயரம்
வீட்டுக்குள்ளேயே தண்ணீர்
என்பது பெருந்துயரம்

விடியும் வடியும் என்று
காத்திருந்த
பெருமக்களின் துயரத்தில்
பாதிக்கப்படாத நானும்
பங்கேற்கிறேன்

என் கடமையின் அடையாளமாக
முதலமைச்சரின்
பொது நிவாரண நிதிக்கு
ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்

பொருள்கொண்டோர்
அருள்கூர்க

சக மனிதனின் துயரம்
நம் துயரம்

இடர் தொடராதிருக்க
இனியொரு விதிசெய்வோம்;
அதை எந்தநாளும் காப்போம்

இவ்வாறு தப்பினது எக்ஸ் தலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

eight + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi