Wednesday, February 21, 2024
Home » மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாதம் சம்பளம் வழங்கினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாதம் சம்பளம் வழங்கினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்

by Suresh

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று நேரில் வழங்கினர். மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது அடியோடு முடங்கி போனது. தமிழக அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர் சேதம், இழப்புகள் என்பது தவிர்க்கப்பட்டது. அதே நேரத்தில் அரசின் துரித நடவடிக்கையால் ஓரிரு நாளில் மக்களின் இயல்பு வாழ்க்கை உடனடியாக திரும்ப தொடங்கியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பல்வேறு நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினர். இந்த சூழலில் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார். அனைத்து சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். அதன்படி, அனைத்து திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர். அதன்படி திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 30 ேபரின் ஒரு மாதம் சம்பளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்களின் ஒரு மாதம் ஊதியமான ₹35 லட்சத்து 70 ஆயிரம், திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாதம் ஊதியமான 91 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் 1 கோடியே 27 லட்சத்து 4 ஆயிரத்து 500க்கான காசோலைகளை வழங்கினர். அதே போல் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi