டெல்லி: மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான ஹாமூன் புயல், தீவிர புயலாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக நேற்று மாறியது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்துள்ள ஹாமூன் என்று பெயரிடப்பட்டுள்ளது.