சென்னை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது: ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் தற்போதைய சூழ்நிலைகளில் எவ்வளவு ரன்கள் குவித்தால் வெற்றி பெற முடியும் என்பதை உறுதியாக கூறமுடியாது. உலகக் கோப்பை தொடரில் வெவ்வேறு நகரங்களில், வெவ்வேறு ஆடுகளங்களில் விளையாடுகிறோம். ஒவ்வொரு ஆடுகளமும் தனித்துவமாக இருக்கும். மேலும் அளவிலும் மாறுபடும். டெல்லி, பெங்களூருவை விட சென்னை ஆடுகளம் அளவில் பெரியது. எங்களை பொறுத்தவரையில் மைதானத்தின் சூழ்நிலை, ஆட்டத்தின் சூழ்நிலை ஆகியவற்றை எவ்வாறுஆடுவோம்.
சூர்யகுமார் யாதவ் சிறந்த பேட்ஸ்மேன். ஒன்றிரண்டு ஆட்டங்களில் அவர், சிறப்பாக செயல்படவில்லை என்பதை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது. அவரது திறமையை நாங்கள் அறிவோம். நாங்கள் அவருக்கு நம்பிக்கையை கொடுக்கிறோம். அவரும், கடினமாக உழைத்து வருகிறார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நடு ஓவர்களில் சிறப்பாக செயல்படுவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த பகுதி மிகவும் முக்கியமானது. இவ்வாறு ராகுல் திராவிட் கூறினார். ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், ஆல்ரவுண்டர்கள் தான் எங்கள் பலம். இந்தியாவின் பந்துவீச்சைப் பற்றி எங்களுக்கு தெரியும். அதனால் அவர்களை சமாளிக்க எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது, என்றார்.