டெல்லி: சிக்கலுக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளது; தீர்வு காணும் முயற்சி தொடர்கிறது என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவ் விளக்கம் அளித்துள்ளார்.
Windows மென்பொருள் முடங்கியதால் பாதிப்பு
உலகின் பல்வேறு பகுதிகளில் Windows மென்பொருள் முடங்கியுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . Windows முடங்கியதால் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. CrowdStrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. தொழில்நுட்பம், பொருளாதாரம், தொலைத்தொடர்பு சேவைகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் Blue Screen Error ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 30 கோடி பயனாளர்கள் மைக்ரோசாஃப்டின் Windowsஐ பயன்படுத்தி வருகின்றனர்.
ஐடி நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கின
விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கின. உலகின் பல நாடுகளில் மின்னணு சேவை, சுகாதாராம் உள்ளிட்ட துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் பிரச்னையால் பல நாடுகளில் கணினி சார்ந்த அலுவல் பணிகள் முடங்கியது.
வங்கி சேவையில் பாதிப்பு இல்லை: எஸ்.பி.ஐ விளக்கம்
மைக்ரோசாஃப்ட் சர்வர் பிரச்சனையால் வங்கி சேவையில் பாதிப்பு இல்லை என பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் கோளாறு-பங்கு வர்த்தகத்தில் பாதிப்பு
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக பங்கு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கியுள்ளன.
மைக்ரோசாஃப்ட் பிரச்னை- வங்கதேசத்தில் மாணவர்கள் தவிப்பு
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பிரச்னையால் வங்கதேச தலைநகர் டாக்காவில் தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றனர். காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்தாகியுள்ளதால் மாணவர்கள் தாயகம் வர இயலாமல் தவிப்பு. விமானங்கள் ரத்தாகியுள்ளதால் காலை முதல் மாணவர்கள் உணவு இல்லாமல் விமான நிலையத்தில் தவிக்கின்றனர். வங்கதேசத்தில் கலவரம் காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த சில மாணவர்கள் சொந்த ஊர் வர திட்டமிட்டுள்ளனர். மைக்ரோசாஃப்ட் கோளாறால் இந்தியாவிற்கு வர இயலாமல் டாக்கா விமான நிலையத்தில் தங்கியுள்ளனர். இத்தகைய மென்பொருள் முடங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றிய அமைச்சர் விளக்கமளித்துள்ளார் அதில்,
மைக்ரோசாஃப்ட் உடன் தொடர்பில் உள்ளோம்: ஒன்றிய அரசு
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு தொடர்பில் உள்ளது என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சிக்கலுக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளது; தீர்வு காணும் முயற்சி தொடர்கிறது. ரயில் சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை. ஒன்றிய அரசின் NIC தொலைத்தொடர்புகள் பாதிக்கப்படவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.