சென்னை : சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை குறைந்தபட்சம் ஒரு மாதம் நீட்டித்துத் தர தமிழக அரசை ஓ பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கப் பட்டுள்ளனர் என்றும் மழை நின்று 36 மணி நேரம் கடந்தும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடியாத அவல நிலை நிலவுகிறது என்றும் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
‘மிக்ஜாம்’ புயல்… மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க ஓபிஎஸ் கோரிக்கை!!
99