எம்ஜி மோட்டார் நிறுவனம், அஸ்டார் பிளாக்ஸ்டோர்ம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.14,47,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் சுமார் ரூ.15,76,800. இந்த ஸ்பெஷன் எடிஷன் எஸ்யுவி, உள்புறமும் வெளிப்புறமும் முழுமையாக கருப்பு நிற தீம்-ஐ அடிப்படையாகக் கொண்டு வருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் அறிமுகம் செய்ததை அடுத்து, இந்த வரிசையில் அடுத்ததாக வெளிவந்துள்ள கார் இதுவாகும். காரில் சில இடங்களில் அழகை மேம்படுத்தும் வகையில் குரோம்வண்ண பூச்சு இடம் பெற்றுள்து. கிரில், அலாய் வீல்கள், ஹெட்லாம்ப் என அனைத்தும் கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஜெபிஎல் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் 1498 சிசி விடிஐ டெக் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 110 பிஎஸ் பவரையும், 4,400 ஆர்பிஎம்-ல் 144 என்எம் டார்க்ைகயும் வெளிப்படுத்தும். பிளாக் தீம் கொண்ட எல்இடி ஹெட் லைட்டுகள், ஹனிகோம்ப் வடிவ கிரில்கள், பிளாக் பினிஷ் ரூப் ரெயில்கள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்களாகும். நார்மல், அர்பன், டைனமிக் என மூன்று மோட்கள் கொண்ட எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரியரிங், ஹீட்டெட் ஓஆர்விஎம், ஹில் டிசன்ட் கன்ட்ரோல் ஆகியவை இந்தப் பிரிவில் முதன் முறையாக இடம் பெற்ற அம்சங்களாகும்.