மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில், இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம், 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இரண்டு பிரிவுகளிலும் மொத்தம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை, பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
previous post