சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 24 நாட்களுக்கு பின்னர் 1,000 கனஅடிக்கு கீழ் சரிந்துள்ளது. சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,031கனஅடியில் இருந்து 792 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 51.98 அடியிலிருந்து 51 அடியாக சரிவு; நீர்இருப்பு 18.44 டிஎம்சியாக உள்ளது.