சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியில் இருந்து 24,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி, 16 கண் மதகு வழியாக 2,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.