மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,044 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 3454 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 51.45 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 51.83 அடியானது. நீர்இருப்பு 18.98 டிஎம்சியாக உள்ளது.