மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று விநாடிக்கு 8,000 கனஅடியாக குறைந்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 18,633 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 10,633 கனஅடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 41,61 அடியாகவும், நீர் இருப்பு 12.93 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10.31 அடி உயர்ந்துள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.