சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.16 அடியாக உயர்ந்துள்ளது. காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பை யாறு நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,980 கன அடி; மேட்டூர் அணையின் நீர் இருப்பு 84.46 டிஎம்சியாக உள்ளது. 230 நாட்களாக 100 அடிக்கும் குறையாமல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உள்ளது
மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதால் திட்டமிட்டப்படி ஜூன் 12ல் நீர் திறக்கப்படவுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீரை ஜூன் 12ல் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணை நீர்திறப்பு மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.