மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலைய 2 ஆவது பிரிவில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர்.15ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என மேட்டூர் அனல்மின் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முதல் பிரிவில் 4 அலகுகளிலும் தலா 120 மெகாவாட் வீதம் 480 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.