சேலம்: மேட்டூர் அணையில் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் தயாள குமாரன், அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு பிற்பகலில் 27,665 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரால் மேட்டூர் அணை நீர்மட்டம் 50.63 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் பாதுகாப்பு, நீர்மட்டம் உயர்வு உள்ளிட்டவை குறித்து தயாள குமாரன் ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு..!!
219