சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25,500 கன அடியில் இருந்து 23,124 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.91 அடியாகவும் நீர் இருப்பு 93.32 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 23,799 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்கு 22,067 கன அடியும், 16 கண் மதகு வழியாக 1,732 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக விநாடிக்கு 500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23,124 கன அடியாக சரிவு!!
0