சென்னை: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர், கடைமடைக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், பேராவூரணி உள்ளிட்ட இடங்களுக்கு காவிரி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும், டெல்டா மாவட்டங்களின் அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் காவிரி நீர் சென்று சேர்வதை உறுதி செய்திடவும் கோரிக்கை விடுத்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழனிசாமி கோரிக்கை
0