சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,514 கன அடியில் இருந்து 14,971 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 55.82 அடியில் இருந்து 56.42 அடியாக அதிகரிப்பு; நீர் இருப்பு 22.994 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.