
நீலகிரி: மேட்டுப்பாளையம் முதல் பவனி சாகர் அணை வரை பவானி ஆற்றுப்பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமுகை பகுதியில் உள்ள ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் ஆற்று நீர் மாசடைந்துள்ளதாக நாளிதழில் செய்தி வெளியானது. இதனை அடுத்து ஆற்று நீரின் தரத்தை அறிய இரு இடங்களில் நீர் மாதிரிகள் சேகரித்து கோவையில் பரிசோதனை செய்ய அனுப்பிவைக்கப்பட்டது.