நீலகிரி: மேட்டுப்பாளையத்தில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் முதன்முறையாக பூண்டு ஏலம் துவங்கியது. சங்கம் துவங்கபட்ட 1935-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்குகளை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து நீலகிரி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் இச்சங்கத்தில் ஊட்டி மலை பூண்டு ஏலம் இணைப்பதிவாளர் தயாளன் தலைமையில் துணைப்பதிவாளர் முத்துக்குமார் முன்னிலையில் துவங்கியது. இன்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ரூ.450/- க்கு விற்பனையானது.