கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த 4 பெண் ஆசிரியைகளிடம் விசாரணை தொடர்வதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.