சென்னை: பூந்தமல்லி அருகே மெட்ரோ பணியின்போது 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளர் உயிரிழந்தது தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் மெட்ரோ பணியின்போது 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தேவேந்திர சிங்(27) உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மெட்ரோ நிர்வாகத்திலிருந்து ஒப்பந்ததாரர் மற்றும் துணை ஒப்பந்ததாரர் என 5 பேரை கைது செய்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி தேவேந்திர சிங் உடலை பிரேத பரிசோதனை முடிந்து விமானம் மூலம் அவரது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்ப சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மெட்ரோ 2ம் கட்ட பணியின்போது உயிரிழந்த தேவேந்திர சிங் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது. மெட்ரோ பணியின்போது நிர்வாகம் தொழிலாளர்களுக்கான உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.