ஒசூர் முதல் பெங்களூரு வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் ஒசூர் பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்தனர். அத்திப்பள்ளி வழியாக ஒசூர் – பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.