Thursday, September 21, 2023
Home » Paytm செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம்

Paytm செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம்

by Neethimaan

சென்னை: Paytm செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் எளிய வகையில் பயணச்சீட்டுகளை Paytm செயலி மூலம் பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள், தி. அர்ச்சுனன் (திட்டங்கள்), பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), அலோசகர் கே.ஏ. மனோகரன் (சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), Paytm நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் அங்கித் சவுத்ரி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்நிகழ்வின் போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மெட்ரோ ரயில் பயணத்திற்கான தற்போதுள்ள டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகளுக்கு மாற்றாக மெட்ரோ பயணிகள் எளிய வகையில் மெட்ரோ பயணச்சீட்டுகளை பெறுவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே வாட்ஸ்அப் மூலம் QR குறியீடு பயணச்சீட்டு பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது.

இதனை தொடர்ந்து தற்போது Paytm நிறுவனத்துடன் இணைந்து Paytm செயலி மூலம் QR குறியீடு பயணச்சீட்டை பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. மேலும், இந்த சேவைகள் தற்போதுள்ள 20% கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது. இதன் மூலம், மெட்ரோ ரயில் பயணிகள் தங்கள் Paytm செயலியில் மெட்ரோ பிரிவின் கீழ் நுழையும் நிலையம் மற்றும் சேருமிட நிலையத்தைக் குறிப்பிட்டு QR பயணச்சீட்டை வாங்க முடியும். Paytm Wallet, Paytm UPI, Paytm UPI Lite, Paytm Postpaid, net-banking or cards போன்ற கட்டண விருப்பங்களை Paytm app தேர்வு செய்து கொள்ளலாம்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் வாயில்களின் QR குறியீடு ஸ்கேனரின் முன் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனை வைத்த பின்னர் மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளலாம். மெட்ரோ ரயில் பயணிகள் Paytm செயலி மூலம் பயணச்சீட்டு பெறுவதற்கான வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டு கொள்கிறது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?