அண்ணாநகர்: அரும்பாக்கம் 100 அடி சாலையில் நற்று அதிகாலை போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, மெத்தபெட்டமின் விற்பனை செய்துவிட்டு, பணம் வாங்க சென்றது தெரிந்தது. விசாரணையில், அம்பத்தூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த தீபக்ராஜ் (25), ஆண்டனி ரூபன் (29) என்பதும், இவர்கள் பெங்களூருவில் இருந்து மெத்தபெட்டமின் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 17 கிராம் மெத்தபெட்டமின் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ஏற்கனவே போதைப்பொருள் விற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.50 கிலோ குட்கா பறிமுதல்: நொளம்பூர் கலைவாணர் தெருவில் உள்ள ஒரு பெட்டி கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த வேலு கருப்புசாமி (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே குட்கா விற்பனை செய்த வழக்கில் 3 தடவை சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும், ஆந்திராவில் இருந்து குட்காவை கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. அவரிடம் இருந்து 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து மெத்தபெட்டமின் விற்ற 2 வாலிபர்கள் கைது
0