மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ என்ற மேம்படுத்தப்பட்ட எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஜிஎல்இ 300டி, ஜிஎல்இ450 மற்றும் ஜிஎல்இ 450டி என மூன்று வேரியண்ட்கள் உள்ளன. துவக்க வேரியண்டான ஜிஎல்இ 300டி-யில் 1993 சிசி 4 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 269 எச்பி பவரையும், 550 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஜிஎல்இ 450-யில் 2999 சிசி 6 சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 381 எச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
டாப் வேரியண்டான ஜிஎல்இ 450டி-யில் 2989 சிசி 6 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 367 எச்பி பவரையும் 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய ஸ்டியரிங் வீல், மேம்படுத்தப்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 13 ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஏர் சஸ்பென்ஷன் இடம் பெற்றுள்ளன. வேரியண்ட்டுக்கு ஏற்ப சிறப்பு அம்சங்கள் மாறுபடும். துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.96.4 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் ரூ.1.15 கோடி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.