மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், சி300 ஏஎம்ஜி லைன் காரை அறிமுகம் செய்துள்ளது. தற்போது சந்தையில் உள்ள சி300டி ஏஎம்ஜி லைன்-க்கு மாற்றாக இது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 258 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. 6 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் வரை செல்லும். 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் ஹைபீம் அசிஸ்ட், 6 பாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி சி போர்ட்கள் உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் சி300 ஏஎம்ஜி
83
previous post