மெர்சிடிஸ் நிறுவனம், ஏஎம்ஜி பென்ஸ் ஜி 63 லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. மைல்டு ஹைபிரிட் காரான இதில் 4.0 லிட்டர் டிவின் டர்போ வி8 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 585 எச்பி பவரையும், 850 என்மெ் டார்க்கையும் வெளிப்படுத்தும்.இதிலுள்ள 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் உடன் சேர்ந்து இயங்கும்போது கூடுதலாக 22 எச்பி பவர் அதிகமாக இருக்கம். 9 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது.
4.4 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். இந்த ஸ்பெஷல் எடிஷன், ஏற்கெனவே பென்ஸ் டாப்வேரியண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும், காத்திருப்புக் காலம் 12 முதல் 18 மாதங்கள் எனவும் கூறப்படுகிறது. ஷோரூம் விலை சுமார் ரூ.4.3 கோடி. ஸ்டாண்டர்டு ஜி63 வேரியண்டை விட ரூ.66 லட்சம் அதிகம்.