சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2017ம் ஆண்டு காட்டுப்பகுதியில் கழிவறைக்கு சென்ற சிறுமியை முள்காட்டிற்குள் வைத்து 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு டிபன் வாங்கி தருவதாக கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த, தாரமங்கலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (21), பிரபு(19), தாமரைச்செல்வன் (20), வேடப்பன்(40) ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கை சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி விசாரித்து சிவக்குமார், பிரபு, தாமரைச்செல்வன், வேடப்பன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் 4 பேருக்கு இரட்டை ஆயுள்
0