Sunday, February 25, 2024
Home » கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முடிவு செய்வது ஆண்களின் குரோமோசோம்களே: கொடுமைக்கார மாமியார்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முடிவு செய்வது ஆண்களின் குரோமோசோம்களே: கொடுமைக்கார மாமியார்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

by Ranjith

புதுடெல்லி: ஆண்களின் குரோமோசோம்களே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முடிவு செய்கின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வரதட்சணை குறைவாக கொண்டு வந்ததற்காகவும் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றதாலும் கணவன் மற்றும் அவனது குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஸ்வர்ன காந்த சர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விவரங்கள் மற்றும் விவாதங்களை கேட்ட நீதிபதி, ‘’இது போன்ற வரதட்சணை கொடுமைகள் மிகவும் கவலை அளிக்க கூடியதாக உள்ளது. இதன் மூலம் திருமணமான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தெரிந்து கொள்ள முடிகிறது. பிறந்த வீட்டை விட்டு வரும் புகுந்த வீட்டிற்கு வரும் மணப்பெண்ணுக்கு அன்பும் ஆதரவும் அளிக்காமல் கொடுமைக்கு உள்ளாகிறார்.

பெண்களிடம் உள்ள இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் ஆண்களிடம் இருக்கும் எக்ஸ், ஒய் குரோமோசோம்களுடன் இணைந்து வினையாற்றி குழந்தை பேறு ஏற்படுகிறது. இதில் ஆண்களிடம் உள்ள எக்ஸ், ஒய் குரோமோசோம்களே கருவில் இருந்து பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை முடிவு செய்கின்றன என்பதை மணமகன், அவரது பெற்றோர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த அறிவியல் குறித்து கற்று கொடுங்கள்,’’ என்று கூறினார்.

You may also like

Leave a Comment

12 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi