நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் வகையில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல முக்கிய விவாதங்கள் நடந்துள்ளன. இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது உட்பட சில வரலாற்று நிகழ்வுகளுக்கு இந்த கட்டிடம் சாட்சியாக இருக்கிறது.