Monday, February 26, 2024
Home » மேல்மருவத்தூர் அருகே சோகம் பைக் மீது கார் மோதியதில் தாய், மகன் பரிதாப பலி

மேல்மருவத்தூர் அருகே சோகம் பைக் மீது கார் மோதியதில் தாய், மகன் பரிதாப பலி

by Arun Kumar

மதுராந்தகம்: திருவண்ணாமலை மாவட்டம் வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரன். இவரது மனைவி வசந்தா (45). இவர்களுக்கு கார்த்திக் (25) என்ற மகன் உள்ளார். தாயும் மகனும் இன்று காலை பைக்கில் மேல்மருவத்தூருக்கு புறப்பட்டனர். சோத்துப்பாக்கம் அருகே வந்தபோது எதிரே வந்த கார், பயங்கரமாக பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பலத்த காயமடைந்த தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் இறந்துபோன வசந்தா சென்னையில் வீட்டு வேலை செய்து வருவதாகவும், மேல்மருவத்தூரில் இருந்து ரயில் மூலம் சென்னை செல்ல தனது மகனுடன் சொந்த ஊரிலிருந்து மேல்மருவத்தூர் ரயில்நிலையம் வந்தபோது வழியில் விபத்தில் சிக்கி தாயும் மகனும் பலியானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

14 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi