விழுப்புரம்: மேல்மலையனூர் அருகே பெருவளூரில் கோயிலில் இருந்து 15 முருகன் வேல்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோகிலாம்பாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள 50 வேல்களில் 15 வேல்கள் திருடப்பட்டுள்ளது. முருகன் வேல்கள் திருட்டு தொடர்பாக வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.