ஷில்லாங்: வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் கிழக்கு ஜைந்திய மலைப் பகுதிகள் வழியாக இந்திய எல்லைக்குள் 6 நபர்கள் நுழைய முயற்சிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய இந்திய பாதுகாப்புப் படையினர், ரதச்சேரா பகுதியில் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்களில் 4 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் உள்ளூர்வாசிகள் அவர்கள் எல்லையைக் கடக்க உதவி செய்ததும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்டவர்கள், உள்ளூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வங்கதேசத்தில் வன்முறையால் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகரித்துள்ளனர்.