ஷில்லாங்: மேகாலயாவில் 60 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள் இருந்தனர். இந்நிலையில் 3 எம்எல்ஏக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது குறித்த நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு எம்எல்ஏக்கள் கடந்த சில மாதங்களாக ஆளும் கட்சியுடன் தொடர்பில் உள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து எம்எல்ஏக்கள் கேப்ரியல் வஹ்லாங் மற்றும் சார்லஸ் மார்ங்கர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.