சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் அரசியலுக்காக பேசுகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: மேகதாது அணை தொடர்பாக சொல்லி சொல்லி அலுத்துப்போய் விட்டேன். கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் அரசியலுக்காக பேசிக் கொண்டிருக்கிறார்.
நான் அது தொடர்பாக அதிகம் பேச விரும்பவில்லை. நந்தன் கால்வாய் திட்டம் இந்த வருடம் முழுமை பெறும். அதற்கென தனி கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆதியிலிருந்து காவிரி பிரச்னையில் நல்ல எண்ணம் இல்லாதவர் தேவகவுடா. அவரைப் பற்றி நன்றாக எனக்கு தெரியும். அவர் பிரதமராக இருந்த போது பேச்சுவார்த்தையின் போது நான் கலந்து கொண்டேன். தமிழகத்தின் மீது நல்ல எண்ணமே இல்லாதவர்’ என்றார்.