சேலம்: மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. நிதி ஆதாரத்தை பொறுத்து மேட்டூர் அணையில் வெளியேறும் உபரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம், மேச்சேரி வரை விரிவாக்கப்படும். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு உள்ளது என்றும் தெரிவித்தார்.