புதுடெல்லி: மலேசிய நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் மூன்று நாள் அரசு முறை பயணமாக கடந்த திங்களன்று இரவு டெல்லி வந்தார். அவருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் நேற்று விரிவான ஆலோசனை நடத்தினார்கள். பல்வேறு துறைகளில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின . இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று மலேசிய பிரதமரை சந்தித்து பேசினார். இருநாட்டு பிரச்னைகள் மற்றும் உலகளாவிய பொதுவான பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.