ஆலந்தூர்: தாம்பரத்தில் இருந்து நேற்று மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன், கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. மீனம்பாக்கம் அருகே சென்றபோது, ஜிஎஸ்டி சாலை நடுவில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்தின் சக்கரம் சிக்கியது. ஓட்டுனர் நீண்ட நேரம் முயன்றும், பள்ளத்தில் இருந்து பேருந்தை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பேருந்து நடுரோட்டில் நின்றதால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் வரிசையாக நின்று போக்குவதற்கு நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இழுவை வாகனம் மூலம் மாநகர பேருந்தை அப்புறப்படுத்தினர். பின்னர், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்து, போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் அரை மணி நேரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீனம்பாக்கம் அருகே சாலையில் திடீர் பள்ளம்: மாநகர பஸ் சிக்கியது
previous post