சென்னை: மீனம்பாக்கத்திலிருந்து குரோம்பேட்டை, குன்றத்தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை புதிய மெட்ரோ வழித்தடம் அமைகிறது. புதிய வழித்தடத்துக்காக குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்களில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியது.