திருவள்ளூர்: மழையின் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்காக இன்று நடத்தப்பட இருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் தேதி குறிப்பிடாமல் ரத்து என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் த.பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்கள் இன்று (27ம் தேதி) முதல் வரும் 6ம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில், மழையின் காரணமாகவும், நிர்வாக காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
மருத்துவ முகாம் ரத்து
0