சென்னை: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்தால் எப்போது வேண்டுமானாலும் சேர்க்கை ரத்து செய்யப்படும். முறைகேடாக மருத்துவப் படிப்பில் சேர முயன்றால் எந்த படிப்புக்கும் 3 ஆண்டுகள் சேர முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவப் படிப்பில் கொடுக்கப்படும் ஆவணங்களுக்கு மாணவர்களும் அவர்களது பெற்றோரும்தான் முழு பொறுப்பு. மருத்துவப் படிப்பில் இடம் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!
0
previous post